இலங்கையில் இந்திய ரூபா செல்லுபடியாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் அறிக்கை விடுத்துள்ளார் . இலங்கையில் சுற்றுலா மேற்கொள்ளும் பயணிகள் இந்திய ரூபாயை உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின்ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த இணைய நிகழ்வில் இக்கருத்தினை தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், நியமிக்கப்பட்ட நாணயமாக இந்திய ரூபாயை உருவாக்குவது, இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தகதீர்வுக்கு உதவுவதோடு, இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின்பரிவர்த்தனைகளுக்கும் பயன்படும் என கூறினார்.