குறைந்த எண்ணிக்கையிலான டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய உலகின் முதலாவது சுழல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை இலங்கை அணி வீரர் பிரபாத் ஜயசூரிய இன்று தனதாக்கிக்கொண்டுள்ளார்.
காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் அயர்லாந்துடன் இடம்பெற்று வரும் டெஸ்ட் போட்டியில் போல் ஸ்டேர்லினை ஆட்டமிழக்கச் செய்தமையூடாக தனது 50 ஆவது விக்கெட் சாதனையை அவர் பெற்றுக்கொண்டார்.
அத்துடன் குறைந்த டெஸ்ட் போட்டியில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது இலங்கை வீரர் என்ற சாதனையையும் அவர் புரிந்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த சார்ல்ஸ் தோமஸ் டர்னர் 6 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைத் தனதாக்கியிருந்தார்.
எனினும், 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுக்களை வீழ்த்திய முதலாவது சுழல் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பிரபாத் ஜயசூரிய தனதாக்கிக்கொண்டுள்ளார்.