ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மயந்த திஸாநாயக்க மற்றும் ராஜித சேனாரத்ன ஆகியோர், நேற்று கொழும்பு ஏ.ஈ.குணசிங்க விளையாட்டரங்கில் நடைபெற்ற, கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தனிப்பட்ட பயணம் ஒன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளார் என்று அவருக்கு நெருக்கமான தரப்புகள் தெரிவித்துள்ளன.
எனினும், ராஜித சேனாரத்ன சமூகம் தராமைக்கான காரணம் வெளியாகவில்லை.
மேற்படி இரண்டு எம்.பிக்கள் உள்ளிட்ட ஒரு குழுவினர் ரணில் அரசுடன் இணையவுள்ளனர் என்று அண்மைக்காலமாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.