ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவையும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவையும் இன்று சந்திக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணிலுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு, சமுர்த்திக் கொடுப்பனவு, காணி உரிமை மற்றும் வீட்டு உரிமை என்பன தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதேநேரம், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துடனான சந்திப்பின்போது, பசறை – மடுல்சீமை பகுதியில், அண்மையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்காமைக்கான விளக்கத்தை வழங்க வேண்டும் எனக் கோரவுள்ளதாக வடிவேல் சுரேஷ் எம்.பி. மேலும் கூறினார்.