நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசியின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் உப தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழு கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழான ஏற்பாட்டை அமுல்படுத்துவதற்கான தீர்மானம் மீதான வாக்கெடுப்பைப் புறக்கணிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்திருந்தது.
எனினும், வாக்கெடுப்பில் பங்கேற்று, அதற்கு ஆதரவாக பௌசி வாக்களித்திருந்தார். இந்நிலையிலேயே அவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளது.