செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிளி/ முருகானந்தா கல்லூரி மாணவன் விபத்தில் மரணம்

கிளி/ முருகானந்தா கல்லூரி மாணவன் விபத்தில் மரணம்

1 minutes read

கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவர் ஒருவர் வீதி விபத்தில் அகால மரணமடைந்துள்ளார். உயர்தர வகுப்பில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்த தவராசா சாருஜன் என்பவரே இவ்வாறு மரணித்துள்ளார்.

கிளிநொச்சி புளியம்பொக்கனை சந்தியில் இன்று அதிகாலை நடைபெற்ற விபத்திலேயே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது. இதனால் பாடசாலை சமூகத்தினர் பெரும் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளனர்.

இறந்த மாணவரின் சடலத்தை காண பெருமளவான மாணவர்கள் வைத்தியசாலையில் திரண்டனர்.

விபத்துக்களை தவிர்க்கும் வகையில் மாணவர்கள் விழிப்போடு நடந்து கொள்ள வேண்டும் என்றும் பெற்றோர்கள் தமக்குரிய பொறுப்பை சரிவர ஆற்ற வேண்டும் என்றும் இன்று பாடசாலையில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வில் வலியுறுத்தப்பட்டது.

பாடசாலை சமூக வலைத்தளத்தில் வெளியான பதிவு

பள்ளி மடியில் ஒரு பிள்ளையென
உன்னை சுமந்தோம்
கல்வியில் சிறந்து எல்லோர் மனங்களிலும் பதிந்தவன் நீயய்யா.
உள்ளம் துடிதுடிக்க
எம்மை விட்டு பிரிந்ததேனோ
என்று இனி உன் முகம்
காண்போம் எம் பள்ளியில்
காலனையும் காலத்தையும்
நோகிறோம்
எம் இதய அஞ்சலி
எம்முயிர் மாணவனுக்கு

மண்ணில் 23.10.2004
விண்ணில் 09.05.2023

எமது கல்லூரியின் உயர் தர கணித பிரிவு 2023 மாணவன் தவராசா சாருஜன் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலி

பாடசாலைச் சமூகம்
கிளி/ முருகானந்தா கல்லூரி

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More