2024 ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் பரந்துபட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு அக்கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடைபெற்ற போதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது சமகால அரசியல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் சம்பந்தமாகவும் ஆராயப்பட்டன.
அத்துடன், அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸ நிறுத்தப்பட வேண்டும் என்ற தீர்மானமும் செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.