செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை கிழக்கு மாகாணத்துக்கு விரைவில் விமான சேவை!

கிழக்கு மாகாணத்துக்கு விரைவில் விமான சேவை!

1 minutes read

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விமான சேவையை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுக்கும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு இடையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் இரண்டு விமான நிலையங்கள் மற்றும் பல கடல் விமானங்கள் இறங்கும் தளங்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளமை குறித்து அமைச்சரின் கவனத்துக்கு ஆளுநர் கொண்டுவந்ததையடுத்து விமான சேவைகளை ஆரம்பிக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதியளித்தார்.

இந்தக் கலந்துறையாடலில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் செயலாளர், விமானப் போக்குவரத்துப் பணிப்பாளர், சுற்றுலா பணியகத்தினர், விமானப்படையினர், Cinnamon Air, Fits Air மற்றும் ஏனைய தனியார் சேவையாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் cinnamon Air தனது விமானச் சேவையை எதிர்வரும் ஜூலை மாதத்திலிருந்து ஆரம்பிப்பதாக உறுதியளித்தது. அதை ஊக்குவிக்க கிழக்கு மாகாண சுற்றுலாப் பணியகம் தனது முழுமையான ஆதரவை அளிப்பதாகத் தெரிவித்தது.

 

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More