1
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த ஹயஸ் ரக வாகனம் இன்று அதிகாலை விபத்தில் சிக்கியதில் 7 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஏ – 9 வீதியில் கனகராஜன்குளத்துக்கும் மாங்குளத்துக்கும் இடையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் சிக்கியவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.