யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்குக் காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின் மண்டைதீவு கிழக்கில் ஜே/07 கிராம சேவகர் பிரிவில் உள்ள 29 பேருக்குச் சொந்தமான 18 ஏக்கருக்கும் அதிகமான தனியார் காணிகளை வெலிசுமன கடற்படை முகாம் அமைப்பதற்காகச் சுவீகரிக்கும் நோக்கில் இன்று அளவீட்டுப் பணிகளை ஆரம்பிக்கப்போவதாக நில அளவைத் திணைக்களத்தினரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அளவீட்டுப் பணிகளைத் தடுத்து நிறுத்துவதற்காக மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் மண்டைதீவு கிழக்கு முத்துமாரியம்மன் ஆலயத்துக்கு அருகில் ஒன்றுகூடி நகர்ந்து சென்று வெலிசுமன கடற்படை முகாம் முன்பாகக் கூடி எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந்த எதிர்ப்புப் போராட்டத்தையடுத்து அளவீட்டுப் பணிகள் கைவிடப்பட்டன.