யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வவுனியா வளாகத்தைச் (தற்போதைய வவுனியா பல்கலைக்கழகத்தைச்) சேர்ந்த மாணவன் ஒருவர் உயிரிழந்த நிலையில் அவருடைய தாயார் கண்ணீர்மல்க தனது மகனின் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
திஸாநாயக்க முதியன்சேலாகே ஹஷான் சாகர திஸாநாயக்க என்ற மாணவன் பிரயோக கணிதம் மற்றும் கணிப்பிடலில் விஞ்ஞானமாணிப் பட்டத்துக்கு உரியவராக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த நிலையில், இன்று நடைபெற்ற 37 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில் தேகாந்த நிலையில் அவரது தாயாரிடம் பட்டம் கையளிக்கப்பட்டது.
குறித்த பட்டத்தைத் தாயாரிடம் கையளித்த போது தாயார் கண்ணீர்மல்க பட்டச் சான்றிதழைப் பெற்றார்.
இந்தக் காட்சி அங்கிருந்தவர்களின் கண்களைச் கலங்கச் செய்தமை குறிப்பிடத்தக்கது.