0
சீனாவின் ‘ ஹாய் யாங் 24 ஹாஓ ‘ போர்க்கப்பல் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு வியாழக்கிழமை (10) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 129 மீற்றர் நீளம் கொண்ட இந்த கப்பலில் 138 பணியாளர்கள் காணப்படுவதோடு , இக்கப்பலின் கப்டனாக கமாண்டர் ஜின் சின் தலைமை வகிக்கின்றார்.
நாளை சனிக்கிழமை இக்கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.