நாடு வங்குரோத்து நிலையில் இருந்து மீள்வதற்காகப் பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இன்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே மொட்டுக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
“நாடு இன்னும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவில்லை. எனவே, பொருளாதார மீட்சி, ஜனநாயகப் பலப்படுத்தல் ஆகிய இருவிடயங்களையே நாட்டு மக்கள் ஜனாதிபதியிடமிருந்து எதிர்பார்க்கின்றனர். இதற்கே ஜனாதிபதி முதலிடம் வழங்க வேண்டும். மாறாக ’13’ பற்றியெல்லாம் பேசுவதற்கு இது உகந்த நேரம் அல்ல.” – என்றும் சாகர காரியவசம் எம்.பி. சுட்டிக்காட்டினார்.