மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்று
காற்று தென்மேற்கு திசையில் மணிக்கு 25 தொடக்கம் 35 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும்.
அம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 தொடக்கம் 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கலாம்.
கடல்
கொழும்பில் இருந்து காலி முதல் மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.
அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் புத்தளத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.