வாகன விபத்தில் தாயும் மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் காலி, கபராதுவை பிரதேசத்தில் நேற்றிரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ஹயஸ் வானும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற 23 வயதுடைய இளைஞரும், அதில் பின் ஆசனத்தில் இருந்து பயணித்த அவருடைய தாயாரும் (வயது 51) உயிரிழந்துள்ளனர்.
இருவரும் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளனர் என்றும், ஹயஸ் வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.