திருகோணமலையிலிருந்து துறைமுகத்தைப் பார்வையிடச் சென்ற கடற்படைக்குச் சொந்தமான பாலம் (ஜெட்டி ) இரண்டாக உடைந்ததால் அதில் பயணம் செய்த 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 15 பேர் கடற்படை வைத்தியசாலையிலும் , 4 பேர் திருகோணமலை ஆதார வைத்தியசாலையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கலிகமுவையிலிருந்து திருகோணமலை துறைமுகத்தைப் பார்வையிடுவதற்காகச் சுற்றுலா வந்தவர்களுக்கே இந்தக் கதி நடந்துள்ளது. இதில் பாடசாலை மாணவர்களே அதிகம் இருந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற கடற்பரப்பு ஆழமற்றதாக இருந்தமையால் பாரிய உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.