யாழ்ப்பாணம், நல்லூர் கோயிலுக்குச் சென்றபோது மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த மூதாட்டி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நல்லூர் குறுக்கு வீதியைச் சேர்ந்த இரத்தினசாமி நித்தியசெல்வம் (வயது – 74) என்ற ஒரு பிள்ளையின் தாயான மூதாட்டியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அந்த மூதாட்டி கடந்த 4ஆம் திகதி இரவு 7 மணிக்கு நல்லூர் கோயிலுக்குச் செல்வதற்காக யாழ். மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியைக் கடந்தபோது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியுள்ளது.
விபத்துக்குள்ளாகிய அவர் மயங்கிய நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
அவர் அங்கு சிகிச்சை பெற்று வந்தந நிலையில் இன்று (10) அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த மரணம் தொடர்பான மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.