தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடை செய்யக் கோரி பருத்தித்துறை பொலிஸார் தாக்கல் செய்த மனுவை பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
தியாகி திலீபனின் நினைவாக நிகழ்வுகள், ஊர்திப் பவனிகளை நடத்துவதன் மூலம் வன்முறைகள் உருவாகும் சூழல் நிலவுகின்றது எனக் குறிப்பிட்டு பருத்தித்துறை பொலிஸார் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.
வன்முறையில் யாராவது ஈடுபட்டால் அவர்களைக் கைது செய்யப் பொலிஸாருக்கு அதிகாரம் உண்டு என்று சுட்டிக்காட்டிய நீதிவான், அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்க முடியாது என்று உத்தரவிட்டார்.