எல்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த கொஸ்கொட சுஜீயின் நெருங்கிய உறவினரைக் கொலை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்ற இராணுவ வீரர்கள் இருவர் எல்பிட்டியவில் கைத்துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இராணுவ வீரர்கள் என சந்தேகிக்கப்படும் இருவரும் பாதாள உலக தலைவர் ரத்கம விதுரவின் இரண்டு சகாக்கள் என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம், குறித்த வர்த்தகரை கொலை செய்வதற்காக அவரது வர்த்தக நிலையத்துக்கு அருகில் தங்கியிருந்த போதே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் விடுமுறைக்காக தமது ஊருக்கு வந்துள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.