வீட்டிலிருந்து சென்ற தனது மனைவியைக் காணவில்லை எனத் தெரிவித்து அவரது கணவர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
இந்த மாதம் 8 ஆம் திகதி வீட்டிலிருந்த தனது மனைவி மதியம் ஒரு மணியளவில் வெளியில் சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கணவனின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.கேதீஸ்வரி (வயது 31) என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல்போயுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன பெண் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் 0770780766 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தித் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.