0
ஹோட்டல் ஒன்றின் முகாமையாளர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இந்தச் சம்பவம் வத்தளை, எலக்கந்த பகுதியில் இன்று (29) இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஓட்டோவில் வந்த நால்வரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மாத்தறையைச் சேர்ந்த 68 வயதான குடும்பஸ்தரே கொலை செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார், சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று குறிப்பிட்டனர்.