வவுனியா – சுந்தரபுரம் பகுதியில் 14 வயது மகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட தந்தைக்குக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்.
தந்தை மகளைத் தகாத முறைக்கு உட்படுத்தியமையால் மகளுக்கு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது.
இந்நிலையில், எதிரியான தந்தைக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி இளஞ்செழியன் நேற்று தீர்ப்பளித்துள்ளார்.
இந்தச் சம்பவம் 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்றுள்ளது. தாய் வெளிநாடு சென்றிருந்த நிலையில் மூன்று தடவைகள் தந்தையால் தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது மகளான சிறுமி நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தபோது கர்ப்பமாக இருந்தமை தெரியவந்துள்ளது.
அந்தச் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து மரபணு பரிசோதனையின்போது எதிரியான தந்தையே பிறந்த ஆண் குழந்தைக்குத் தந்தையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அரச சட்டதரணி தர்சிகா திருக்குமரநாதன் வழக்கை நெறிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய, எதிரியான தந்தைக்கு 12 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.