0
இலங்கையில் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை இதனை அறிவித்துள்ளது.
இந்தநிலையில், மின்சார விநியோகத்தை வழமைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மின்சார சபை தெரிவித்துள்ளது.
திடீர் மின் தடையால் இலங்கை மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.