இந்தியப் பெருங்கடலில் வடக்கு சுமத்ரா கடற்பகுதியில் இன்று ஏற்பட்ட நில நடுக்கத்தால் இலங்கைக்குச் சுனாமி அபாயம் ஏதும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்ள கடலோரப்பகுதிகள் பாதுகாப்பாக உள்ளது என்றும் அந்த மையம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு சுமத்ரா தீவுகளை சுற்றியுள்ள கடலில் இன்று காலை 10.49 மணியளவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதையடுத்துத் தாம் விடுக்கும் அறிவிப்புகள் தொடர்பில் இலங்கையின் கரையோரப் பகுதிகளில் வாழும் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையிலேயே இலங்கைக்குச் சுனாமி அபாயம் இல்லை என்று அந்த மையம் பின்னர் அறிவித்துள்ளது.