1
திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார்.
44 வயதுடைய நபரே சம்பவத்தில் உயிரிழந்தார் என்று சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி நபர், கப்பல்துறை பகுதியில் உள்ள காட்டுக்கு விறகு எடுப்பதற்குச் சென்ற வேளையில் யானையின் தாக்குதலுக்கு இலக்கானார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.