கடந்த யூன் மாதம் நான்காம் திகதி நோர்வேயில் நடைபெற்ற சுதந்திரம் கோரி போராடுகின்ற இனக் குழுமங்களுக்கிடையிலான அதாவது அங்கீகரிக்கப்படாத தேசங்களுக்கு இடையிலான மகளிர் உதை பந்தாட்ட போட்டி நிகழ்வு நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழீழ மகளிர் உதைபந்தாட்ட அணியும் இப் போட்டியில் பங்குபெற்றி இறுதிச்சுற்றுவரை முன்னேறி மிகச் சிறப்பாக விளையாடி இரண்டாம் இடத்தையீட்டி சாதனை நிகழ்த்தியிருந்தார்கள்.
இன்றைய தினம் (26/10/24 சனிக்கிழமை) கிளிநொச்சியில் தமிழீழ மகளிர் உதை வந்தாட்ட அணியில் பந்துக்காப்பாளராக களமாடிய வீராங்கணை செல்வி. ரமணன் சாரா ரூபினா அவர்களை பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சிவஞானம் சிறீதரன் அவர்கள் மதிப்பளித்து ஆசி வழங்கினார்.
இம்மதிப்பளிப்பு நிகழ்வில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் மேநாள் அதிபர். திருமதி ஜெயந்தி தனபாலசிங்கம் அவர்களும் பங்கு பற்றி வீராங்கனையை மதிப்பளித்திருந்தார்.
மேலும் மதிப்பளிப்பு நிகழ்வில் கரைச்சி பிரதேச சபையின் மேநாள் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் அவர்களும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் திரு. அலன் அவர்களும் மத்திய கல்லூரியின் ஆசிரியர்கள் அருணாசலம் சத்தியானந்தன் மற்றும் ஜெயசுதர்சன் அவர்களும் விளையாட்டுத்துறை ஆர்வலர்கள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.