0
மன்னார் வளைகுடா கடற்பரப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (12) கைது செய்யப்பட்ட 8 இந்திய மீனவர்களும் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த 8 இந்திய மீனவர்களும் கடற்படையினரால் கிளிநொச்சி மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் அந்த மீனவர்களை ஆஜர்படுத்தியபோதே விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.