செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுத்த ஈழத்து ஊடகவியலாளருக்கு பிடியாணை

நில ஆக்கிரமிப்புக்கு எதிராக குரல் கொடுத்த ஈழத்து ஊடகவியலாளருக்கு பிடியாணை

1 minutes read

மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு போராட்டத்தில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர் சசி புண்ணிய மூர்த்திக்கு பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மட்டக்களப்பு (Batticaloa) மாவட்டத்தில் அச்சுறுத்தலுக்கும் காவல்துறையினரின் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்காலிகமாக நாட்டை விட்டு வெளியேறிய ஊடகவியலாளர் சசி புண்ணியமூர்த்தி நாட்டில் இல்லாத காரணத்தால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், குடிவரவு குடியல்வு திணைக்களத்திற்கும் அவரின் விபரத்தை அனுப்புமாறும் பணிக்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம்

அத்துடன், 30, பேருக்கும் ஒரு இலட்சம் சரீர பிணை வழங்கப்பட்டுள்ளதுடன் ஒரு வாரத்துக்குள் நீதிமன்றில் தனித்தனியாக பிணையாளிகளுடன் பதிவு செய்யுமாறு கால காலவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மயிலத்தமடு மேய்ச்சல் தரை விவகாரம்: ஈழத்து ஊடகவியலாளருக்கு பிடியாணை | Arrest Warrant For Journalist Sasi Puniyamurthy

 

இதேவேளை, மயிலத்தமடு மேய்ச்சல் தரை மீட்பு விடயமாக முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக கடந்த 08.09.2023 அன்று கொம்மாதுறையில் இடம்பெற்ற கவன ஈர்ப்பு போராட்டம் மீதான வழக்கு இன்று (22) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு மீண்டும் 9ஆவது தவணை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More