செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மயிலத்தமடு ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு | சந்தேக நபர்களுக்கு சரீரப் பிணை!

மயிலத்தமடு ஆர்ப்பாட்டம் தொடர்பான வழக்கு | சந்தேக நபர்களுக்கு சரீரப் பிணை!

1 minutes read

மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் ஊடகவியலாளர் ஒருவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேக நபர்களுக்கு ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணை வழங்கப்பட்டதுடன் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஒக்டோபர் 8ஆம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின்போது கொம்மாதுறை பகுதியில்  மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் இரண்டு ஊடகவியலாளர்கள் உட்பட 30 சந்தேக நபர்களை  குறிப்பிட்டு ஏறாவூர் பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இன்றைய தினம் (22) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற  நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது இன்றைய தினம் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பாராளுமன்ற அமர்வு காரணமாக நீதிமன்றில் ஆஜராகவில்லை என நீதவானின் கவனத்துக்கு சட்டத்தரணியால் கொண்டுவரப்பட்டது.

இதேபோன்று ஏற்கனவே நீதிமன்றுக்கு சமுகமளிக்காத நிலையில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன் வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றின் கவனத்துக்கு பொலிஸாரினால் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் ஊடகவியலாளர் சசிகரனுக்கு திறந்த பிடியாணை பிறக்கப்பட்டதுடன் குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்கும் அறிவிக்குமாறும் உத்தரவிட்ட நீதிவான், இன்றைய நீதிமன்ற விசாரணைக்கு தோற்றிய 27பேருக்கும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் ஒரு வார காலத்துக்குள் சமர்ப்பிக்கும் நிபந்தனையுடன் பிணையில் செல்ல அனுமதித்தார்.

அத்துடன் எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி வரை வழக்கினை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

இன்றைய விசாரணையின்போது வழக்குடன் தொடர்புடைய 30 பேரில் இருவர் மன்றத்துக்கு சமுகமளிக்காமையினால் அடுத்த வழக்கில்  தொடர்புடைய அனைவரையும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More