77 ஆவது சுதந்திர தின ஒத்திகையை முன்னிட்டு சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்தில் விசேட போக்குவரத்து திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகக் கொழும்பு பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகைகள் ஜனவரி 29 ஆம் திகதி முதல் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறவுள்ளன.
இதன் காரணமாக சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்தில் உள்ள பல்வேறு வீதிகள் மூடப்படவுள்ளன.
விசேட போக்குவரத்து திட்டங்கள் ;
- கொழும்பு கருவாத்தோட்டம் விஜேராம மாவத்தை ஊடாக வித்தியா மாவத்தை நோக்கி செல்லல்
- கொழும்பு கருவாத்தோட்டம் பெளத்தாலோக்க மாவத்தை ஊடாக மெட்டிலன்ட் பிரதேசத்திற்கு செல்லல்
- கொழும்பு கருவாத்தோட்டம் ஊடாக பிரேம கீர்த்தி டி அல்விஸ் மாவத்தைக்கு செல்லல்
- கொழும்பு கருவாத்தோட்டம் ஸ்டென்லி விஜயசுந்தர மாவத்தை ஊடாக மன்ற கல்லுாரி வீதிக்கு செல்லல்
- கொழும்பு கருவாதோட்டம் சுதந்திர சதுக்க சுற்றுவட்டத்திலிருந்து சுதந்திர சதுக்கத்தை நோக்கிச் செல்லல்
- கொழும்பு கருவாதோட்டம் ஆர் ஜி சேனாநாயக்க மாவத்தை ஊடாக மெட்டிலன்ட் பிரதேசத்திற்கு செல்லல்
- கொழும்பு கருவாதோட்டம் சுதந்திர சதுக்க சுற்றுவட்டம் ஊடாக மெட்டிலன்ட் பிரதேசத்திற்கு செல்லல்
- கொழும்பு கருவாதோட்டம் ஹோர்டன் ஊடாக மெட்டிலன்ட் பிரதேசத்திற்கு செல்லல்