அவர்கள் இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
பருத்தித்துறைக் கடற்பரப்பில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 13 இந்திய மீனவர்களுடன் படகு ஒன்று அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டது.
அதன்போது கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கைக் கடற்படையினர், இந்திய மீனவர்களைக் கைது செய்யும் நோக்குடன் அவர்களின் படகில் ஏறிய வேளை, படகில் ஏறிய ஒரு கடற்படைச் சிப்பாயுடன் மீனவர்கள் தப்பிச் செல்ல முற்பட்டனர்.
அதனையடுத்துக் கடற்படையினர், இந்திய மீனவர்களின் படகு மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு படகை வழிமறித்துக் கடற்படைச் சிப்பாயை மீட்டதுடன், படகில் இருந்த 13 மீனவர்களையும் கைது செய்தனர்.
அவர்களில் இருவர் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுக்கு இலக்கான நிலையில் அவர்கள் பருத்தித்துறைப் பொலிஸார் ஊடாக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
ஏனைய 11 மீனவர்களையும் கடற்றொழில் நீரியல் வளத்துறையினர் ஊடாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.