சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், நாட்டில் லிட்ரோ எரிவாயு விலையை அதிகரிக்கப்போவதில்லை என தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
கையிருப்புக்கள் முறையாக பேணப்படுவதால் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் செப்டம்பர், ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களிலும் லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றங்கள் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் சில்லறை விலை 3,690 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 1,482 ரூபாவாகவும், 2.3 கிலோ எடை கொண்ட எரிவாயு சிலிண்டரின் விலை 694 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.