இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கதிர்காமம் பொது பஸ் நிலையத்திலுள்ள கழிப்பறைக்கு அருகில் மேற்படி இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் கதிர்காமம் பகுதிக்கு வெளியே இருந்து வந்தவர் என்றும், அவர் பல நாட்களாகக் கதிர்காமம் நகரத்தில் சுற்றித் திரிந்தார் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு மீட்கப்பட்ட சடலம், பிரேத பரிசோதனைக்காகக் கதிர்காமம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.