5
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் பயணித்த கார் விபத்துக்குள்ளானதில், காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கார் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்ககுள்ளானது என்று தெரிவிக்கப்படுகின்றது.