இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ். வேலணை – செட்டிப்புலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இதில், அதே இடத்தைச் சேர்ந்த சந்திரஹாசன் கனிஷ்டன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
சிறுவனின் தாயார் அயலிலுள்ள உறவினரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இதனால், வீட்டில் தனித்திருந்த சிறுவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக மின் இணைப்பை ஏற்படுத்த முயன்றுள்ளார். அப்போது அவர் மின்சாரத்தால் தாக்குண்டு வீழ்ந்து கிடந்துள்ளார்.
வீட்டுக்கு வந்த உறவினர்கள் நிலைமையை அவதானித்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார் என்று அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சிறுவனின் சடலம் உடல் கூறாய்வுக்காக யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.