யாழ்ப்பாணம் – கிளிநொச்சி குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் தாளையடியில் அமைந்துள்ள கடல் நீரை நன்னீராக சுத்திகரிக்கும் நிலையத்தை வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று வெள்ளிக்கிழமை (28) நேரில் சென்று பார்வையிட்டார்.
இதன்போது திட்டப் பணிப்பாளரும் பொறியியலாளருமான எஸ்.மாலதி மற்றும் பொறியியலாளர் விஜயகாந் தலைமையிலான குழுவினர் ஆளுநரை வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து, குடிநீர் விநியோகத் திட்டத்தின் கட்டுப்பாட்டு அறையின் செயற்பாடுகளை ஆளுநர் பார்வையிட்டார்.
அதன் பின்னர், கடல் நீரை உள்ளெடுக்கும் நிலையம், சுத்திகரிப்பு மற்றும் விநியோகம் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டார்.
இது தொடர்பாக திட்டப் பணிப்பாளர் மற்றும் பொறியியலாளர்கள் ஆளுநருக்கு விளக்கமளித்தனர்.