அமெரிக்க அரசால் நசுக்கப்பட்ட நாடுகளின் குரலை தான் அமெரிக்க மக்கள் ”I CAN’T BREATHE” என முழங்கி வருவதாக, ஈரான் அதிபர் சையத் அலி கொமேனி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அதிபர் அயதுல்லா கொமேனியின் 31 வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், சக காவலர்கள் முன்னிலையில், கருப்பினத்தவரை கழுத்தில் முழங்காலால் அழுத்தி கொன்ற காவல் அதிகாரியை போல், அமெரிக்க அரசு, உலக மக்கள் முன்னிலையில், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா, வியட்னாம் என பல்வேறு அரசுகளை நசுக்கியுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் அமெரிக்க அரசின் உண்மையான முகத்தை அந்நாட்டு மக்கள் காணத்துவங்கி உள்ளதாக தெரிவித்தார்.