0
இத்தாலியின் மிலன் நகரில் புகழ்பெற்ற இத்தாலிய பத்திரிகையாளர் இந்திரோ மொன்டனெல்லியின் சிலை மீது இனபாகுபாடு எதிர்ப்பாளர்கள் சிவப்பு வண்ணப்பூச்சு வீசினர்.
காலனித்துவத்தை பாதுகாத்தவர் என்றும் 1936 ஆம் ஆண்டில் எத்தியோப்பியா மீதான படையெடுப்பின்போது 12 வயது சிறுமியை மனைவியாக விலை கொடுத்து வாங்கியவர் என்றும் அறியப்படும் மொன்டனெல்லியின் சிலையின் கீழ் இனவெறி மற்றும் கற்பழிப்பு என்ற வார்த்தைகள் எழுதப்பட்டன. இது குறித்து இத்தாலி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.