டிக் டாக் உள்ளிட்ட சீன சமூகஇணைய செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் தேச பாதுகாப்பு, இந்திய மக்களின் தனிநபர் தகவல் பாதுகாப்பு உள்ளிட்டவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயல்பாடுகள் இருந்ததால், அந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது.
இந்நிலையில், பாக்ஸ் நியூஸ் ((Fox News)) தொலைக்காட்சிக்கு மைக் பாம்பேயோ அளித்துள்ள பேட்டியில், சீன செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து அமெரிக்கா ஆராய்ந்து வருவதாக கூறியுள்ளார்.