அமெரிக்காவில் போர்க்கப்பலில் பற்றி எரியும் நெருப்பை அணைக்கும் பணி 2வது நாளாக நீடித்து வருகிறது. சான்டியாகோ கடற்படைத் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த யுஎஸ்எஸ் கோன்ஹோம் ரிச்சர்ட் என்ற போர்க்கப்பலில் ஏற்பட்ட வெடிப்பு காரணமாக நெருப்பு பற்றி எரிந்து வருகிறது.
ஆயிரம் பேர் பணியாற்றிய இந்தக் கப்பலில், தீப்பிடித்த போது 160 பேர் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. தீ விபத்து காரணமாக 36 மாலுமிகள் மற்றும் 23 பணியாளர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கப்பலில் பற்றிய நெருப்பை அணைக்கும் பணி 2வது நாளாக தொடர்ந்து நீடித்தது.
நீர், வானம், நிலம் என 3 பிரிவுகளாக நெருப்பை அணைக்கும் பணியில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கட்டுக்கடங்காமல் நெருப்பு எரிந்து கொண்டிருப்பதால் கப்பல் மூழ்கும் அபாயம் எழுந்துள்ளதாக அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.