கொரோனா தடுப்பூசி குறித்த முக்கிய அறிவிப்பை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இன்று அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் ஆய்வில் உள்ளன. அந்த வகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கொரோனா மருந்து குறித்த முக்கிய தகவல்கள் இன்று வெளியாகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது ஊக்கம் அளித்துள்ளதாகவும்முதல் கட்ட பரிசோதனைக்கான முடிவுகள் ஜூலை இறுதிக்குள் வெளியிடப்படலாம் எனவும் மருந்து தயாரிக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது.