0
கனடாவில் சுற்றுலா பேருந்து ஒன்று மலையில் இருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.
ஆல்பர்ட்டா ஜாஸ்பர் தேசிய பூங்காவில் கொலம்பியா ஐஸ்ஃபீல்ட் அருகே உள்ள பனிப்பாறையில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள 27 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அவசரகால பணியாளர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.