அடுத்த ஆண்டின் தொடக்கம் வரையில் கொரோனா வைரசுக்கான தடுப்பூசியை எதிர்பார்க்க வேண்டாம் என, உலக சுகாதார அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக பேசிய அந்த அமைப்பின் அவசர காலத் திட்டத்தின் தலைவர் மைக் ரியான், நோய்த்தொற்றிற்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் ஆராய்ச்சியாளர்கள் நல்ல முன்னேற்றம் அடைந்து இருப்பதாகவும், ஆனால் அவற்றின் பயன்பாட்டை அடுத்த ஆண்டில் மட்டுமே எதிர்பார்க்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
பொருளாதாரத்தைச் சார்ந்து இல்லாமல் தேவையை பொறுத்து தடுப்பூசி விநியோகத்தை உறுதி செய்ய செயல்பட்டு வருவதாகவும், தடுப்பூசி கிடைக்கும் வரையில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.