டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒரேநாளில் 14 ஆயிரம் கோடி ரூபாய் நிதிதிரட்டி உள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
நாசாவின் உதவியுடன் முதல் தனியார் நிறுவனமாக, ஸ்பேஸ் எக்ஸின் விண்கலம் சமீபத்தில் வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்று வந்தது.
இந்நிலையில், ப்ளூம்பெர்க் நிறுவனம் கடந்தவார நிதி திரட்டல் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், ஒரே நாளில் சுமார் 14 ஆயிரம் கோடி ரூபாய் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டதில், அந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது அந்நிறுவனத்தால் ஒரு நாளில் திரட்டப்பட்ட அதிகபட்ச நிதி எனவும் கூறப்படுகிறது.