இயான் புயலால் புளோரிடாவில் உள்ள சானிபெல் தீவு முற்றிலுமாக சேதமடைந்ததைக் காட்டும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன.
செப்.28ம் தேதி புளோரிடாவை புயல் தாக்கிய போது, மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் பல வீடுகள் சேதமடைந்தன.
புயல் பாதிப்புகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இயான் புயலால் சானிபெல் தீவில் மரங்கள் வேரோடு சாய்ந்ததோடு, Fort Myers கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்ட கப்பல்கள் ஒன்றோடொன்று மோதி சேதமடைந்துள்ளன.