அமெரிக்காவில் நோயாளி ஒருவரை ஏற்றிச் சென்ற மருத்துவச் சேவை வழங்கும் விமானம் விபத்துக்குள்ளானதில், அந்த நோயாளி உட்பட நோயாளியின் குடும்பத்தினர், விமானி, தாதி மற்றும் மருத்துவ உதவியாளர் என 5 பேர் மரணித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Care Flight எனும் மருத்துவ சேவை விமானமே இந்த விபத்தில் சிக்கியுள்ளது.
அந்நாட்டுப் பொலிஸார் மற்றும் தீயணைப்புப் படையினருடன் இணைந்து விமானம் விபத்துக்குள்ளான காரணத்தைக் கண்டறிய முயற்சிப்பதாக Care Flight விமான மருத்துவ சேவை தெரிவித்துள்ளது.