அமெரிக்காவின் மிசூசிப்பி மாகாணத்தில் கடுமையான சூறாவளி நேற்று முன்தினம் வீசியுள்ளது.
இந்த புயல் மணிக்கு 161km வேகத்தில் வீசியத்துடன் இந்த சூறாவளியால் மிசூசிப்பி ,அலபாமா , டென்சியே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியுடன் கடுமையான மழையும் பெய்த காரணத்தால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரம் இன்றி இன்றும் காணப்படுகின்றது மேலும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது இதுவரையில் 26 பேர் மரணித்துள்ளனர் . மரங்கள் சரிந்து விழுந்துள்ளதுடன் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
இதை போலவே 2023.1.12 அன்று 35க்கும் அதிகமான சூறாவளி அமெரிக்காவில் பதிவாகியது அமெரிக்காவின் அலபாமா என்ற மாகாணமே இந்த சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்டதாக அமெரிக்க தேசிய காலநிலை மையம் அறிவித்திருந்தது.