சூறாவளி காரணமாக அமெரிக்காவின் மிசூசிப்பி மாகாணத்தை தொடர்ந்து மத்திய அமெரிக்காவை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது . கட்டிடங்கள் ,பொது இடங்கள் என்று அனைத்தும் காற்றின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தரை மட்டமாகியுள்ளது.
மத்திய அமெரிக்கா தாக்கிய சூறாவளி காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதியில் வீசிய சூறாவளியால் 7 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
புயல் காரணமாக அலபாமா, இல்லினாய்ஸ், மிசிசிப்பி மற்றும் லிட்டில் ராக் பகுதியில் இடி மின்னலுடன் கடும் மழை கொட்டித் தீர்த்தது.மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்காண மக்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர். இல்லினாய்ஸின் பெல்விடேரில் வீசிய சூறாவளி அப்பல்லோ தியேட்டரின் கூரையை விசிறியடித்ததில் ஒருவர் உயிரிழந்தார்.