தமிழ்த் திரை உலகில் வளர்ந்துவரும் இளம் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ்க்கும் இளம் வயதிலே தனக்கென தனி இடத்தை பெற்ற பின்னணிப்பாடகி சயந்தவிக்கும் எதிர்வரும் வியாழக்கிழமை ஜூன் 27ம் திகதி திருமணம் நடைபெற உள்ளது.
சிறு வயதிலிருந்தே நண்பர்களான இவர்கள் பின்னர் காதலர்களாக மாறி இப்போது திருமணம் செய்கின்றார்கள். தத்தமது துறையில் சாதனை படைத்த இவர்கள் தெய்வத் திருமகன், தாண்டவம், யுத்தம் மற்றும் தலைவா போன்ற திரைப்படங்களில் சேர்ந்து கடமையாற்றி உள்ளார்கள்.
இவர்களது திருமணம் சென்னையில் உள்ள மேயர் இராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் காலையில் நடைபெற்று அதே மண்டபத்தில் இரவு வரவேற்பு நிகழ்வும் நடைபெற் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Courtesy – Video – Indialitz.com