2
சிறுவயது முதல்
எங்கள் தலையிலே சுமை
அலை பாயும் கூந்தலாக..
வயதுக்கு வந்தவுடன்
உடலியல் மாற்றங்களின் சுமை
பொங்கி வரும் இளமையாக..
கணவனைக் கைப்பிடித்ததும்
வயிற்றிலே சுமை
தாய்மை என்னும் கருவாக..
பெற்று இறக்கியதும்
குழந்தைகளின் தொல்லை
அன்புச் சுமையாக..
தள்ளாடும் முதுமையிலும்
நெஞ்சிலே சுமை
மனக்கவலைகளாக..
நாங்கள் இன்னும்
சபிக்கப்பட்ட உயிரினமாய்
பூமித்தாய்க்குச் சுமையாக
– தமிழ் ப்ரியா
நன்றி : இது தமிழ்